The Indian Times

வணக்கம் டா மாப்ளே படத்தின் நண்பன் மட்டும் போதும்டா பாடல்!

தமிழ் சினிமாவில் சிறந்த இசைமைப்பாளர் மற்றும் நடிகராகா வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிகராக நடித்த படங்களை விட இவர் இசையமைத்த படங்களை தான் மக்கள் பெரியளவில் விரும்புகுறார்கள். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததால் ஒரு ஹீரோவாக இவரால் வெற்றியை தர முடியவில்லை. டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா , பென்சில் , வாட்ச்மன் , சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இவர் நடித்துள்ள பாச்சிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தற்போது வணக்கம் டா மாப்ள என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜி.வி.பிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் டா குமாரு என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படம் பெரியளவில் வெற்றியடையவில்லை.

Advertisement

தற்போது வணக்கம் டா மாப்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக அம்ரித்தா ஐயர் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாது காமெடி நடிகரான டானி நடித்துள்ளார். அதோடு யோகிபாபு , ஆனந்தராஜும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் நண்பன் மட்டும் போதும்டா என்ற கானா பாடல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in