நடிகர் விவேக் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடியனாக இருந்தவர் நடிகர் விவேக். இவருக்கு “சின்னக்கலைவாணர்”என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில் காமெடி என்றாலே செந்தில் கவுண்டமணி தான் ஞாபகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அந்த இடத்தை நிரம்பியவர் விவேக். காமெடி செய்தாலும் அதில் சமூக கருத்தையும் கலந்து செய்பவர் இவர். தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த பெருமை விவேக்கிற்கு உண்டு.

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

நடிகர் விவேக் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்! 1

விளம்பரம்

விவேக் சூப்பர் ஸ்டார் ரஜினி போல் ஸ்டைல் செய்து சில வீடியோக்களை பதிப்விட்டுளார். இவருக்கு மரம் நடுவதில் ஆர்வம் அதிகம் , நடிகர் மட்டுமல்லாது இளைஞர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்ந்தவர் விவேக். இவரது பணியை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு இவருக்கு ‘பத்ம ஸ்ரீ விருது’ என்ற விருதை இவருக்கு கொடுத்து கெளரவித்தது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமில்லாது சமூக அக்கறை கொண்ட நல்ல மனிதரும் கூட. இந்நிலையில் நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று அதிகாலை காலமானார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

நடிகர் விவேக் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்! 2

விளம்பரம்

இதனால் இவருக்கு தற்போது பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையயில் நடிகர் சூர்யா, கார்த்தி நடிகை ஜோதிகா , நடிகர் விக்ரம் , நடிகர் மயில்சாமி , மன்சூர் அலிகான், கஞ்சா கருப்பு, கவிஞர் வைரமுத்து , நடிகர் சந்தானம் ,சூரி , யோகி பாபு நடிகை திரிஷா என பலர் நேரில் சென்று விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த இழப்பு தமிழ் சினிமாவிற்கு மிக பெரிய இழப்பு என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment