The Indian Times

அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அனிருத் | Anirudh | Arabic kuthu song

தற்போதைய தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் என்று அழைக்கப்படுபவர் அனிருத். முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை கொடுத்து இன்று தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஹிட்டான பாடல்களை கொடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றார் அனிருத். இன்று அனிருத் இசைக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குத்து பாடல்கள் ஆனாலும் சரி மெலடி பாடல்கள் ஆனாலும் சரி தன்னுடைய தனித்துவமான இசையால் பலரை கட்டி போட்டு வைத்துள்ளார் என்றால் அது மிகையில்லை.

Advertisement

இன்று எந்த ஒரு பெரிய நடிகர் படமென்றாலும் அதில் அனிருத்தின் இசையும் இருக்கும். அந்த அளவிற்கு தன்னுடைய திறமையின் மூலம் எட்டாத உயரத்தில் பல ரசிகர்களை தக்கவைத்து வருகிறார் அனிருத். தற்போது நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் வெளியாகவுள்ளது. அதில் இசையமைத்துள்ளார் அனிருத். அரபிக் குத்து என்ற பாடல் இரண்டு நாளைக்கு முன்பு வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டு இருக்கிறது.

Advertisement

இப்போது அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அரபிக் குத்து பாடலுக்கு அவரும் அவருடைய நண்பர்களும் நடனம் ஆடி உள்ளனர். வீடியோவை பகிர்ந்த சிறிது நேரத்தில் பல லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்து பகிர்ந்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவை பார்க்க.. Watch the Below Video…

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in