The Indian Times

தலைவர் 169 படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யா ராய்..? வெளியான புது தகவல் | Thalaivar 169

சூப்பர்ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த் என்பது உலகம் அறிந்த ஒன்று! அரை நூற்றாண்டாக தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஒரே ஒரு நட்சத்திர நடிகர் என்றால் அந்த ரஜினிகாந்த் அவர்கள் தான்! கண்டக்டராக இருந்து கலைத்துறையில் அடியெடுத்து வைத்து வெற்றி பாதையில் உலா வரும் இவர் ஒரு சாதனையாளர் என்றால் அது மிகையாகாது! சமீபத்தில் கூட இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதும் குறிப்பிடத்தக்க ஒன்றே! பல தடைகளை தாண்டி வெற்றிநடை போட்டு வரும் ரஜினிகாந்த் அவர்கள் தனது வயதை கூட பொருட்படுத்தாமல் இன்று வரை மக்களை மகிழ்வித்து வரும் கலைஞராக இருக்கிறார்.!

ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை அவ்வப்போது ஒத்துவராத நிலையிலும் அவர் நடிப்பை கைவிடவில்லை. குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள், மகள் மருமகன் பிரிவு என எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதையும் சமாளித்து கொண்டு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவருடைய இந்த கடின உழைப்புதான் அவரை சூப்பர் ஸ்டார் ஆக ஆகியுள்ளது என்றால் அது மிகையில்லை.

Advertisement

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஹீரோயின்ஆக யார் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. எந்திரன் வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவல் தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in