The Indian Times

மெர்சல் படத்தில தளபதிக்கு மகனாக நடிச்ச Child Artist, இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

Advertisement

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். 50 சதவீத இருக்கையில் வெளியாகி இருந்தாலும் , படம் வசூலளவில் மிக பெரிய சாதனை படைத்தது. இளைய தளபதி விஜய் என்ற பெயர் தளபதி விஜயாக மாறியது அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் இருந்து தான். இந்த படத்தில் சமந்தா , காஜல் , நித்யா மேனன் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடித்தனர்.

Advertisement

இந்த படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்திருந்தாலும் , படம் வெளியான பிறகு பல சர்ச்சைகளும் எழுந்தது. இருப்பினும் இந்த படத்தில் வரும் தளபதி என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. அந்த அளவிற்கு அட்லீ அந்த கதாபாத்திரத்தை செதுக்கி இருப்பார். இந்நிலையில் மெர்சல் படத்தில் தளபதி விஜய்க்கு மகனாக நடித்த அக்ஷாந்த் தாஸின் தற்போதுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in