The Indian Times

ஜெய் பிறந்தநாளை கொண்டாடிய சிம்பு! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வளம் வருபவர் நடிகர் ஜெய். பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார் ஜெய். அதன் பிறகு சென்னை 28, கோவா , வடக்கரி, புகழ் என்று பல படங்களில் நடித்துள்ளார் ஜெய். இறுதியாக இவர் நடித்து வெளிவந்த கேப்மாரி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியை தேடி தரவில்லை. இன்னும் இவர் நடித்த சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது.

சமீபத்தில் இவரது பிறந்தநாளிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு ஜெய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சென்று வாழ்த்தி கேக் வெட்டி கொண்டாடியுளார். little superstar ஆக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று str ஆக பல தமிழ் நெஞ்சங்களை கவர்ந்திழுத்தவர் சிம்பு. இவர் இறுதியாக நடித்த படம் ஈஸ்வரன்.

Advertisement

இதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் பெரியளவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் தன் நண்பர் ஜெய்யின் பிறந்தநாளை நேரில் சென்று கொண்டாடிய str இன் வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in