The Indian Times

இசைஞானி இளையராஜா மற்றும் யுவனின் இசையில் வெளியான மாமனிதன் பாடல்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா கதாநாயகனாக வலம் வரும் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. மாஸாகவும் நடிக்க தெரியும் மாஸாக இருக்கும் நடிகருக்கு வில்லனாகவும் நடிக்க தெரியும். சிறந்த ஹீரோ என்பதையும் தாண்டி மிக சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர் விஜய் சேதுபதி. இவருக்கு பட வாய்ப்புகள் எக்கச்சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தற்போது லாபம் , துக்லக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், காதுவாக்குல ரெண்டு காதல் , விஜய் சேதுபதி 46 என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

Advertisement

இதை தொடர்ந்து தற்போது மாமனிதன் படத்தில் நடித்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சமீபத்தில் இந்த படத்தின் first look வெளியாகி வைரலானது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று , தர்மதுரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக இசை ஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இனைந்து பாடல்கள் இசைமைக்கின்றனர். தற்போது இந்த படத்தின் தட்டிபுட்டா தட்டிபுட்டா என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in