The Indian Times

சாந்தனு, அதுல்யா ரவி நடித்த முருங்கக்காய் சிப்ஸ் ட்ரைலர் | யோகிபாபு

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர் பாக்யராஜ். அவருக்கு பின் அவருடைய மகன் சாந்தனு சினிமாவில் குதித்தார். இவரது முதல் படமான சக்கரக்கட்டி எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரியளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்துடுத்த கதைகள் ஏதும் சந்தனுவிற்கு பாராட்டுகளை வாங்கி தரவில்லை. இறுதியாக இவர் நடித்த படம் மாஸ்டர்.

Advertisement

ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் இடம்பெற்றதால் நெட்டிசன்கள் இவரை மீம்ஸ் போட்டு வெச்சு செய்தனர். இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.முருங்கக்காய் சிப்ஸ், கே பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தமிழ் திரைப்படம். ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்தில் தரன்குமாரின் இசையும், ரமேஷ் சக்ரவர்த்தியின் டிஓபியும் உள்ளன.

Advertisement

இப்படத்தில் யோகி பாபு, மனோபாலா, ரேஷ்மா பசுபுலேதி, மதுமிதா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். முருங்கக்காய் சிப்ஸ் ரவிந்தர் சந்திரசேகரனால் லிப்ரா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்டது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in