The Indian Times

AR.ரஹ்மானை பாடவிடாமல் சிரிப்பு காட்டிய விக்ரம்…சிரித்து விழுந்த ரஹ்மான்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த சினிமாவிலும் கிடைக்கவில்லை தமிழ் படம் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.1999 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சேது படத்தில் விக்ரம் நடித்தார்.இப்படத்தில் அவருடைய மொத்த உழைப்பையும் போட்டு தமிழ் சினிமாவையே அலற வைத்தார்.இப்படம் மாபெரும் வெற்றி கண்டது.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து இவர் ரசிகர்களால் சீயான் என செல்லமாக அழைக்கப்பட்டார்.தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகியது,இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.இதனால் சீயான் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமுக்கு அடுத்ததாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.

Advertisement

இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்துள்ளார்.செப்டம்பர் 30 இப்படம் திரைக்கு வர இருக்கிறது.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விக்ரம் பிசியாக கலந்துகொண்டு வருகிறார்.இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை பொன்னியின் செல்வன் பாடலை பாட ரசிகர்கள் கேட்க,அதற்கு ரஹ்மான் பாடி கொண்டிருக்கும் பொழுது விக்ரம் பின்னணியில் பாடி சிரிப்பு ஏற்படுத்தியுள்ளார்.இதனால் ரஹ்மான் பாடாமல் விழுந்து சிரித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in