The Indian Times

96 பட விஜய் சேதுபதி போல வாழ்க்கையை ரசித்து வாழும் நடிகை சாய்பல்லவி

தனது கடின உழைப்பால் இன்று மிக பெரிய நடிகையாக சினிமா உலகை வலம் வருபவர் சாய் பல்லவி.இவர் முதல்முறையாக 2005 ஆம் ஆண்டு வெளியாகிய கஸ்தூரி மான் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தாம் தூம் படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.இப்படி சிறு சிறு வேடங்களில் நடித்த சாய் பல்லவி தற்பொழுது தமிழ்,மலையாளம்,தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடினார்.பின்னர் நல்ல வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ப்ரேமம் எனும் மலையாளப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல மொழி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார்.

Advertisement

இவர் தற்போது தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று மகிழ்ந்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்க்கையை செம்மயா வாழுறீங்க என்ஜாய் பண்ணுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in