The Indian Times

உடற்பயிற்சியாளருக்கு காரை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்… என்ன மனுஷன்ப்பா இவரு

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை தனது ஒவ்வொரு படத்திலும் புதியதாக எதையாவது செய்து மக்களை மகிழ்விக்க நினைப்பார். எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா அதே கதாபாத்திரமாக மாரி அனைவரையும் வாயடைக்க செய்துவிடுவார் இவர்.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்போது அறிமுகம் ஆகும் நட்சத்திரங்களுக்கும்,கொடிகட்டி பறக்கும் நட்சத்திரங்களுக்கும் நடிப்பில் முன் உதாரணமாக திகழ்கிறார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.நடிகர் ஆக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தமிழ் சினிமாவை அசத்தியவர்.இவர் இயக்கிய விருமாண்டி படமெல்லாம் இன்றுவரைக்கும் அதிக மக்களால் ரசிக்க கூடியவையாக உள்ளது.

Advertisement

அரசியலில் களம் இறங்கிய கமல்ஹாசன்,நீண்ட நாட்களாக படம் நடிக்காமல் இருந்தார்.சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க முடிவு செய்து இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் கதை கேட்டார்.கதை பிடித்துப்போகவே அதனை தானே தயாரிப்பதாகவும் முடிவு எடுத்தார்.அதன்படி உருவாகியது தான் விக்ரம்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குனருக்கு கமல்ஹாசன் காரினை பரிசாக வழங்கினார்.மேலும் படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர்களுக்கு பைக்குகளை பரிசாக வழங்கினார்.இந்நிலையில் தனது உடற்பயிற்சியாளருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் கமல்ஹாசனின் பெருந்தன்மையை பாராட்டி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in