The Indian Times

PREBOOKING-ல் வெளிநாட்டில் வசூல் மழையில் பொன்னியின் செல்வன்…இது சும்மா TRAILERதான்மா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார் மணிரத்னம்.பல முன்னனி ஹீரோக்களை இயக்கி,பல முன்னணி நட்சத்திரங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.இவர் படங்கள் எப்பொழுதும் சற்றுமாறுபட்டே காணப்படும்,இதனால் தான் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Advertisement

தற்போது இவரின் நீண்ட நாள் கனவு சோழ வரலாறு ஆன பொன்னியின் செல்வன் படத்தினை எடுக்க வேண்டும்,அதற்கான நேரம் தற்போது அமைந்ததால் அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் லைக்கா நிறுவனத்துடன் இணைத்து இப்படத்தினை இரண்டு பாகங்களாக தயாரித்துள்ளார்.இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், நாசர், பார்த்திபன்,ரகுமான்,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளது.இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதன்படி வெளிநாட்டில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது.முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.அதன்படி அமெரிக்காவில் $375K வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.படம் வெளியாவதற்கு முன்னரே இவ்வளவு வசூல் என்றால் படம் வெளியானால் ஆயிரம் கோடி ரூபாய் வந்துடும் போலேயே என ரசிகர்கள் மகிழ்ச்சியில் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

கயிலைமணி சுகுமார் — 25/9/2022

Fine ours ambishion last sixty years.we can’t say how enjoy in all respects.வந்தேமாதரம் ! வந்தேமாதரம்!! வந்தேமாதரம்!!! வாழ்க அருள்மொழி புகழ்.