விடா முயற்சி படப்பிடிப்பில் கலை இயக்குனர் மிலன் நெஞ்சுவலியால் உயிரிழப்பு

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விடா முயற்சி படப்பிடிப்பில் கலை இயக்குனர் மிலன் நெஞ்சுவலியால் உயிரிழப்பு 1

விளம்பரம்

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய இயக்குனர் பாக்கியராஜ்

விடா முயற்சி படப்பிடிப்பில் கலை இயக்குனர் மிலன் நெஞ்சுவலியால் உயிரிழப்பு 2

விளம்பரம்

இந்நிலையில் அஜித் தனது 62வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்க உள்ளார்.இப்படத்திற்கு விடாமுயற்சி என படக்குழு பெயரிட்டுள்ளது.படபிடிபி அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில் இப்படத்தின் கலை இயக்குனர் மிலன் நெஞ்சு வலியால் அஜர்பைஜானில் மரணமடைந்துள்ளார்.இவர் கலாப காதலன் படத்தின் மூலம் அறிமுகமாகி , பில்லா,ஏகன்,வேட்டைக்காரன் என பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment