The Indian Times

நீங்க இல்லாமல் நான் இல்லை… ரசிகர்களுக்கு பிரியாணி ஊட்டிவிட்ட அசீம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல்தொடங்கி முடிவடைந்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் அசீம் பிக் பாஸ் கோப்பையை தட்டி சென்றார். இதனால் விக்ரமன் ரசிகர்கள் கடும் சோகத்திற்கு ஆளாகினர்.

தற்போது இவரும் தனலக்ஷ்மியும் பிக் பாஸ் ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.அங்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.மேலும் அசீமுக்கு அங்கு பிரியாணி கொடுக்கவே அதனை அனைத்தயும் தனது ரசிகர்கள் பாசமாக ஊட்டி விட்டுள்ளார் மேலும் ரசிகர்களும் அசீமுக்கு பிரியாணியை பாசமாக ஊட்டி விட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் மேல் எவ்வளவு பாசம் அஸீமுக்கு என கூறி ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Embed video credits : BEHINDWOODS TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in