The Indian Times

என் புள்ளை கோபி ரொம்ப நல்லவன் கோபிக்கு சப்போர்ட் செய்யும் ஈஸ்வரி… பாக்யலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் எழில் தாங்கள் இருக்கும் வீட்டை கோபியிடம் காசு கொடுத்து வாங்குவதாக சவால் விட்டார்,அதற்காகவும் தற்போது அவர் உழைத்து வருகிறார். ஆனால் கோபியிடம் விட்ட சவாலில் எழில் பணம் கிடைக்காமல் தோற்றுவிடுகிறார். வீட்டை விட்டு அனைவரையும் வெளியே போக சொல்ல வருகிறார்

வீட்டிற்குள் வந்த கோபி அனைவரையும் நக்கலாக பேசியுள்ளார்.இதனால் கடுப்பாகிய பாக்கியா இந்த வீட்டுக்கான காசை மொத்தமாக நான் தருகிறேன்,ஆறு மாசம் காலஅவகாசம் கொடுங்கள்,உங்க காசு உங்களை தேடி வரும் என கூறியுள்ளார்.தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இதில் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் பொழுது ஈஸ்வரி பாக்கியா மேல் உள்ள கடுப்பில் என் பையன் கோபி ரொம்ப நல்லவன் நமக்காக வீட்டை கொடுத்துட்டு அவன் கஷ்டப்படுறான் என கூறியுள்ளார்.இதனால் கடுப்பாகிய தாத்தா மனைவி ஈஸ்வரியை கிழித்தெடுத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் ஈஸ்வரி மேல் இருக்கும் கடுப்பினை அதிகரித்துள்ளது.உங்களுக்கு நடந்தா தான் வலி தெரியும்,கோபி நல்லவன்னு சொல்ல வாய் கூசலையா உங்களுக்கு என கிழித்தெடுத்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=r18TVge8lbA

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in