The Indian Times

பாரதி சட்டையை கிழித்து பொண்ணு வீட்டுக்காரர்கள் முன்னால் அசிங்கப்படுத்திய கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு அவர் பாரதியை சந்திக்கிறார்.பாரதி பேருந்து நிறுத்தத்தில் சிகெரெட் பிடிப்பதை தட்டி கேட்ட கண்ணம்மா மீது பாரதி பகையாகிறார்.இதனால் பாரதியும் கண்ணம்மா மேல் திருட்டு பழியை சுமத்துகிறார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் அதற்கு பழி வாங்கும் விதமாக பாரதி பொண்ணு பார்க்க போகும் பொழுது பாரதி இருக்கையில் பசையை தடவி சட்டையை கிழிக்க வைக்கிறார்,சட்டை கிழிந்ததால் பெண் பார்க்க போக முடியாமல் தவிக்கிறார்,அவரை பெண் வீட்டு காரர்கள் அசிங்கப்படுத்தியுள்ளனர்.இதனால் கடுப்பாகிய பாரதி கண்ணம்மாவை அடித்துள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in