The Indian Times

விக்ரமன் எனக்கு BEST FRIENDங்க… நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க.. அசீம் FIRST LIVE

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு இத்தகைய பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் தான்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவற்றிற்கும் இந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையென்று தான் கூறவேண்டும்.தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 6வது சீசனில் அடியெடுத்து வைத்து அதிலும் பயங்கர ஆதரவு திரட்டி இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறது பிக் பாஸ்,தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்தது என்னவென்றால் மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் தான் இந்த போட்டியில் விளையாட முடியும் அவர்கள் மனது வைக்கும் நபர் தான் வெற்றிக்கோப்பையை பறிக்க முடியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, என 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை நடைபெற்ற சீசன்களில் போட்டியாளர்கள் யார் வெற்றிபெறுவார்,மக்கள் ஆதரவு யாருக்கு என்பதை முன் கூட்டியே கணித்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார் என்பது கணிக்க முடியாமல் இருந்தது.

Advertisement

ஷிவின்,அசீம்,விக்ரமன் ஆகிய மூன்று பேர் மட்டுமே இறுதிக்கட்ட போட்டிக்கு மக்கள் ஆதரவுடன் வருகை தந்துள்ளனர்.இதில் இந்த முறை பிக் பாஸ் 6 டைட்டிலயும் 50 லட்சம் பணத்தினையும் வெற்றிபெற்றுள்ளது அசீம் ஆகும்.முதல் முறை அசீம் நேரலையில் கலந்துகொண்டு மனம் திறந்து பேசியுள்ளார்,அதில் அவர் கூறியதாவது,நானும் விக்ரமனும் நல்ல நண்பர்கள் எங்களுக்கு கோவத்தில் தான் சண்டையே தவிர ரெண்டுபேரு கொள்கைகளும் ஒன்று தான் ,அவர் எனக்கு நல்ல நண்பர்,எங்களுக்கு இடையே வீட்டிலும் சரி வெளியிலும் சரி பிரச்சனைகள் கிடையாது என பாசமாக கூறியுள்ளார் அசீம்

https://youtu.be/htNYJe_Au9A?t=570

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in