The Indian Times

விவகாரத்தை கையிலெடுத்த பாக்கியா…கோர்ட்டுக்கு போலாமாங்க என கோபியை அழைத்து GOOSBUMPS ஆக்கிட்டாரு | BAAKIYALAKSHMI PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள் இந்நிலையில் இவருக்கும் ராதிகாவுக்கும் ஆன உறவு மனைவி பாக்கியாவுக்கு தெரிந்தது.இதனால் வீட்டில் பிரச்சனை வெடித்து பாக்கியா இனி கோபியுடன் வாழமாட்டேன் என கூறி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.அவரை சமாதானப்படுத்தி கோபி வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

தற்போது புதிய ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் பாக்கியா கோர்ட்டில் இருந்து விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது என கூறி கோபியை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு கிளம்பியுள்ளார்.அப்பொழுது அனைவரும் அவரை தடுக்க கோபி ஆசைப்பட்டதை கொடுக்கணும்லே,போலாமா என கோபியை அழைக்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் அப்படியே பண்ணுங்க பாக்கியா கோபியை விவாகரத்து செய்யுங்க என கூறி உணர்ச்சிபொங்க கமெண்ட் செய்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 Comment

Ramya — 1/8/2022

Not only divorce. Also wanna send him out from that family..