The Indian Times

நஸ்ரியாவை விட நச்சென நடனமாடி இளைஞர்களை கவர்ந்த விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரீது

சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீது கிருஷ்ணன்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நாடகங்களை நடிக்க தொடங்கினார்.இவர் மெல்ல திறந்தது கதவு,கல்யாணமாம் கல்யாணம்,ஆயுத எழுத்து என பல நாடகங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிப்பு மட்டுமில்லாமல் நடனத்தின் மீதும் ஆர்வம் உள்ளதால் சிறுவயதிலேயே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.மேலும் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய டான்சிங் கில்லாடிஸ் என்ற போட்டியிலும் கலந்து தனது நடனத்திறமையை காண்பித்து ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஸ்ரீது.மேலும் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது சரியான சீரியல் வாய்ப்புகள் இல்லாததால் தனக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ரீது அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அண்மையில் இவர் நண்பருடன் சேலையில் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது.தற்போது அதனை தொடர்ந்து அடடே சுந்தரா படத்தில் நடிகை நஸ்ரியா நடனம் ஆடிய பாடலுக்கு நஸ்ரியாவை விட கியூட் ஆக சூப்பர் ஆக நடனமாடி அனைவரையும் அசத்தினார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவரை வாழ்த்தி வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in