The Indian Times

வீட்டை வாங்க காசுக்காக சொந்த கதையை விற்கும் எழில்…. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் பாக்கியா இருக்கும் வீட்டை என் வீடு என கோபி உரிமை கோருகிறார்,இதனால் கடுப்பாகிய எழில் வீட்டை மொத்த காசு கொடுத்து தானே வாங்குவதாக கூறி சவால் விடுகிறார். தற்போது புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. இதில் வீட்டை வாங்க எழில் தனது இயக்கத்தில் உருவாகி வந்த கதையை விற்க முடிவு செய்கிறார்,முன்னதாக இப்படத்தினை தயாரித்த தயாரிப்பாளர் தனது மகளை எழில் கல்யாணம் செய்துகொண்டால் படத்தினை எடுக்கலாம் அல்லது நிறுத்திவிடலாம் என கூறியிருந்தார்.இந்நிலையில் எழில் அவரிடம் பேசி தனது கதையை விற்க அனுமதி கோருகிறார்.இதனால் எழிலை விட கூடாது என ஏதோ திட்டம் போட்டு படத்தினை திரும்ப இயக்கலாம் என கூறுகிறார்,இதனால் செய்வதறியாது எழில் விழித்துக்கொண்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=m1w670w0J_o

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in