The Indian Times

கிராமத்து கோவில் திருவிழாவில் அல்வா கடை போட்டு விற்பனை செய்த CWC மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் நீங்கி மனம் விட்டு சிரிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இவர் தனது கிராமத்து நண்பர்களுடன் திருவிழாவில் கலந்துகொண்டு அலப்பறை செய்துள்ளார்,மேலும் அங்குள்ள கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி மகிழ்ந்துள்ளார்.,மேலும் அங்குள்ள அல்வா கடைக்குள் சென்று அல்வாவையும் விற்பனை செய்துள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.ரசிகர்கள் மணிமேகலையின் சேட்டைகளை ரசித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.வீடியோ தற்போது யூடியூப் பக்கத்தில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது.

Embed Video Credits : HUSSAIN MANIMEGALAI

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in