The Indian Times

இனி உன்கூட வாழமாட்டேன்.. வீட்டை விட்டு வெளியேறிய ராதிகா.. நடு ரோட்டில் கெஞ்சும் கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இனியாவால் ஏற்பட்ட பிரச்னையை தாங்க முடியாமல் கோபி அதிகளவு குடிக்கிறார்.குடித்துவிட்டு ரோட்டிலேயே விழுந்து விடுகிறார்.உடனே பாக்கியாவுக்கு போன் வரவே எழிலை அழைத்துக்கொண்டு கோபியை அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு சென்று விடுகிறார்,உடனே கடுப்பாகிய ராதிகா நீ யாரு இவரை கூட்டிட்டு வர என கேட்கவே ,தோழியோட புருஷன் என்ற மனிதாபிமானத்தில் தான் கூட்டிட்டு வந்தேன் என ராதிகாவுக்கு பதிலடி கொடுத்து செல்கிறார்.இதனால் கடுப்பாகிய ராதிகா அடுத்த நாள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அவரை கோபி வெளியேற விடாமல் தடுக்கவே ராதிகா கோபி பேச்சை கேட்காமல் மகளை கையில் பிடித்துக்கொண்டு செல்கிறார்.ராதிகா காலில் விழாத குறையாக கோபி கெஞ்சுகிறார்.இருப்பினும் ராதிகா கேட்டபாடில்லை.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தவறு செய்யும் ஆண்களுக்கெல்லாம் கோபி ஒரு பாடம் என கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=Jgu1K6oCtSI

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in