The Indian Times

உனக்கு கேட்டரிங் காண்டிராக்ட் கிடைக்கவிடாம கெடுத்தது நான் தான் பாக்கியா – திமிராக பேசிய ராதிகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

காலனி தேர்தலில் பாக்கியாவுக்கு எதிராக நின்று ராதிகா தோல்வி அடைந்தார்.இதனால் பாக்கியா மேல் கடுப்பில் இருக்கும் ராதிகா,தனது நிறுவனத்தில் ராதிகாவுக்கு கொடுத்த கேட்டரிங் கான்டிராக்டை கிடைக்க விடாமல் கெடுத்துள்ளார்.மேலும் சென்று, என்ன பாக்கியா பெரும் பெரும் நஷ்டம் போல கூறி கிண்டலடித்துள்ளார்.மேலும் உனக்கு திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை,நான் தேர்தலில் தோற்ற உடனே எவ்வளவு சந்தோசப்பட்ட அதனால் தான் உனக்கு காண்டிராக்ட் கிடைக்கவிடாம கெடுத்ததே நான்தான் என கூறி நக்கலாக சிரித்து சென்றுள்ளார்.

https://www.youtube.com/watch?v=iX_9hjfwlIg

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in