The Indian Times

அம்மா துபாய் போறேன்… காரில் அழுத VIJAY TV தொகுப்பாளினி பிரியங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இவர் துபாய் செல்லும் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதில் தன்னை வழியனுப்ப வரும் தம்பி மற்றும் அம்மாவை விட்டு பிரிய மனமில்லாதது போல அழுது நடித்துள்ளார்.இவரின் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அக்கா உங்க நடிப்பு சூப்பர்,எல்லாரையும் நல்லா ஏமாத்திட்டிங்க என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.,ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து சப்போர்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : Priyanka deshpande

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in