The Indian Times

எல்லோரையும் வச்சி செய்த அசீமை போட்டு படாதபாடு படுத்திய நண்பன்… bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.மிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் இதுவரை முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் .ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியேறியுள்ளார்,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார் .ஒன்பதாவாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது

Advertisement

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுடன் சிறிது நேரத்தினை பிக் பாஸ் செலவிட செய்கிறது.அந்த வகையில் தற்போது அசீம் தம்பியும் நண்பரும் அவரை காண வந்துள்ளனர்.வந்த இடத்தில் அசீமை போட்டு படாதபாடு படுத்தி அவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு என்ஜாய் செய்துள்ளனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in