The Indian Times

குறைந்த வாக்குகள்…இந்த வாரம் 2 அதிரடி போட்டியாளர்களில் ஒருவர் கட்டாயம் வெளியே… அப்போ இவராத்தான் இருக்கும் அப்போ

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளிலும் இந்நிகழ்ச்சி அங்குள்ள நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது.6வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் அனைவரும் இறுதி போட்டியை எதிர்நோக்கி நகர்ந்து வருகின்றனர்.பிக் பாஸ் நிகழ்ச்சியும் இறுதி கட்டத்தினை எட்ட போகிறது.தமிழில் இந்நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பினை மக்கள் அளிப்பதால் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

ஒவ்வொரு சீசனிலும் 20 போட்டியாளர்களை எடுத்து அவர்களை விளையாட வைத்து மக்களை கவர வைத்து,இறுதியில் மக்கள் யாரை நினைக்கிறார்களோ அவரையே தேர்ந்தெடுத்து பரிசினை கொடுப்பார்கள்.அதன்படி இந்த 6வது சீசனில் கலந்துகொண்ட 20 பேரில் இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,ஷெரினா, குயின்சி, ராம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என இதுவரை வீட்டில் இருந்து 12 பேர் வெளியேறியுள்ளனர். அசீம்,விக்ரமன்,அமுதவாணன்,மைனா,மணிகண்டன்,ஏடிகே,ரட்சிதா,ஷிவின்,கதிர் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

Advertisement

இவர்களில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே செல்ல விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, Adk, மணிகண்டன், அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள்.இன்னும் வாக்குகளை செலுத்த ஒரே நாள் உள்ள நிலையில் இதில் இருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.ஏடிகேவும்,மணிகண்டனும் கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர்,மணிகண்டன் ஏடிகே விடவும் குறைவான வாக்குகளை பெற்று கீழே உள்ளதால்,இவர் வெளியே போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல இவர்களை தவிர வேறு யாரேனும் வெளியே சென்றாலும் செல்லலாம்.நீங்கள் உங்களுக்கு பிடித்தமான நபருக்கு வாக்களிக்க விரும்பினால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று வாக்கு அளித்து மேலும் அவர்கள் ஓட்டுகள் விபரங்களையும் தெரிந்துகொள்ளலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in