The Indian Times

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் WILDCARD ENTRY ஆக வரும் அதிரடி போட்டியாளர்… அப்போ கப்பு இவங்களுக்கு தான் போலயே

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமாகியவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் ரீல்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோ செய்து வைரலாகி இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் மேலே முன்னேறி வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் தனலக்ஷ்மிக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல ஆதரவே கிடைத்து வந்தது.இந்த சீசனில் முதல் முதலாக குறும்படம் தனலக்ஷ்மிக்கு ஆதரவாகா தான் போடப்பட்டது.அந்தளவிற்கு நல்ல போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தவர் தனலட்சுமி .

Advertisement

இவர் இறுதிவரை வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனலட்சுமி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தனது நல்ல விளையாட்டினை காட்டினார்,இருந்தும் அவர் வெளியே அனுப்பப்பட்டது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது.இந்நிலையில் தனலட்சுமி சென்ற பிறகு டி ஆர் பி குறைந்ததாலோ என்னமோ மீண்டும் அவரை வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியாகி உள்ளனர்,இது நடந்தால் மீண்டும் வீட்டில் அதிரடிக்கு பஞ்சம் இருக்காது என கூறி தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in