The Indian Times

துணை இயக்குனர்களை காலால் எட்டி உதைப்பேன்.. கொடூர முகத்தை காட்டிய BB ஆயீஷா

விஜய் தொலைக்காட்சியில் ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சி மூலம் தான் முதல் முறையாக கேமிராவை சந்தித்து சின்னத்திரையில் தோன்றியவர் ஆயீஷா.பின்னர் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.அதனை தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களிடம் அங்கீகாரம் கொடுத்தது ஜீ தமிழில் இவர் நடித்து வந்த சத்யா என்ற சீரியல் தான்

Advertisement

தற்போதுவரை இவரை ரசிகர்கள் சத்யா என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.பின்னர் டிக் டாக்கில் மிக பிரபலம் ஆகினார்.மேலும் லட்ச கணக்கானோர் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். போட்டியாளர்களிடம் அவ்வப்பொழுது வெடித்து சிதறி வருகிறார் ஆயீஷா.

இந்நிலையில் திரைக்காக காட்டும் முகம் வேறு ஒரிஜினல் முகம் வேறு என்பதை தற்போது இவர் நிரூபித்துள்ளார்.அதன்படி இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் என்னை தூங்கும் பொழுது தொந்தரவு செய்தால் பிடிக்காது,படப்பிடிப்பில் உதவி இயக்குனர்கள் எழுப்பினால் அடிப்பேன்,காலால் எட்டி உதைப்பேன் இதனால் துணை இயக்குனர்கள் என்னை தூக்கத்தில் எழுப்ப பயப்படுவார்கள் என கூறியுள்ளார்.இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in