இதெல்லாம் நான் நாடகத்துல போட்ட உடைகள்… பழசை மறக்காத தாமரை அக்கா

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

இதெல்லாம் நான் நாடகத்துல போட்ட உடைகள்... பழசை மறக்காத தாமரை அக்கா 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இதெல்லாம் நான் நாடகத்துல போட்ட உடைகள்... பழசை மறக்காத தாமரை அக்கா 2

விளம்பரம்

தற்போது தாமரை யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது ஆரம்பித்த சோலா நாட்களிலேயே 50ஆயிரம் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார் தாமரை.தற்போது இவர் தான் நாடகத்தில் அணிந்த உடைகளை காண்பித்து தற்போது கஸ்டப்படுபவர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment