The Indian Times

கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.

கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?v=s1RnY5yQwus

Embed video credits : VIJAY TELEVISION

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிபு நடித்து வருகிறார்.

Advertisement

ஆரம்பத்தில் இருவருக்கும் மோதல் இருந்த நிலையில் தற்போது நல்ல நண்பர்களாக இருவரும் இருந்து வருகின்றனர்.அதே சமயம் கண்ணம்மாவை பள்ளியை விட்டு நீக்க வெண்பா திட்டம் தீட்டியும் வருகிறார்.இப்படி நாடகம் சூடுபிடித்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் நடக்கமுடியாமல் படுத்தப்படுக்கையாக இருக்கும் கண்ணம்மா அம்மாவை நடக்க வைக்க பாரதி ஒரு திட்டம் தீட்டுகிறார்.அதன்படி கண்ணம்மா ஏணியிலிருந்து கீழே விழவே அதனை பார்த்து துடித்த கண்ணம்மா அம்மா பதறிக்கொண்டு எழுந்து நடக்க முயற்சி செய்கிறார்.மேலும் எழுந்தும் கண்ணம்மாவிடம் நடந்து வருகிறார்.

இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இப்பொழுதுதான் நாடகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in