The Indian Times

வீடு தேடி வந்து தமிழிடம் மன்னிப்பு கேட்ட சந்திரகலா… தமிழும் சரஸ்வதியும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.

இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

Advertisement

அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தவார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் சரஸ்வதி வசுந்தரா உயிரையே காப்பாற்றுவதில் சந்திரகலா மனம் மாறி சரஸ்வதி நல்லவர் என்பதை புரிந்துகொண்ட அவரை கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பும் கேட்கிறார்.

மேலும் தமிழ் வீட்டுக்கே வந்து தமிழ் மற்றும் சரஸ்வதியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in