பிக் பாஸ் வீட்டில் முதல்நாள் மகிழ்ச்சியாக நடனமாடும் போட்டியாளர்கள்…BIGG BOSS 6 PROMO

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி அக்டொபர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் முதல்நாள் மகிழ்ச்சியாக நடனமாடும் போட்டியாளர்கள்...BIGG BOSS 6 PROMO 1

விளம்பரம்

அண்மையில் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை ராஜு ஜெயமோகன் பிடித்து டைட்டிலை தட்டி சென்றார் பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார்.இதனை தொடர்நது பிக் பாஸ் 24 மணி நேரம் நேரலையிலும் பிக் பாஸ் அல்டிமேட் என வெளியாகியது.இதற்கும் மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர்.தற்போது பிக் பாஸ் சீசன் 6 நேற்று முதல் தொடங்கியுள்ளது.இதில் 20 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்

பிக் பாஸ் வீட்டில் முதல்நாள் மகிழ்ச்சியாக நடனமாடும் போட்டியாளர்கள்...BIGG BOSS 6 PROMO 2

விளம்பரம்

வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து அனைவரையும் மிரள செய்துள்ளார்.தற்போது நிகழ்ச்சியின் முதல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் காலையில் பிக் பாஸ் எழுவதற்கு போட்ட பாடலில் குத்தாட்டம் போட்டுள்ளனர்.குறிப்பாக ஜிபி முத்து நடனத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment