The Indian Times

வந்தாச்சு BIGG BOSS 6 அப்டேட்…முதல் ஆளாக கலந்துகொள்ளும் குக் வித் கோமாளி பிரபலம்

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.விரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் பல பிரபலங்களிடம் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

அண்மையில் 5வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் இடத்தினை ராஜு ஜெயமோகன் பிடித்து டைட்டிலை தட்டி சென்றார் பிரியங்கா இரண்டாவது இடத்தினை பிடித்தார்.இதனை தொடர்நது பிக் பாஸ் 24 மணி நேரம் நேரலையிலும் பிக் பாஸ் அல்டிமேட் என வெளியாகியது.இதற்கும் மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர்.இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்,பின்னர் பட வேளைகளில் பிசியாகியதால் நடிகர் சிம்பு முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.தற்போது பிக் பாஸ் 6 குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் 6வது சீசனில் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன் களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிக் பாஸ் சீசன் இவர் கலந்துகொள்ள பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் அது நிறைவேறாமல் போக தற்போது இந்த சீசனில் இவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் பலர் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்ட நிலையில் இறுதியில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை இதனால் ரக்ஷன் கலந்துகொள்வதும் உறுதி இல்லை எனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in