கமலையே வீட்டுக்குள் துணைக்கு கூப்பிட்ட GP முத்து….முதல் நாளே GP முத்தை வச்சு செய்த கமல்

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

கமலையே வீட்டுக்குள் துணைக்கு கூப்பிட்ட GP முத்து....முதல் நாளே GP முத்தை வச்சு செய்த கமல் 1

விளம்பரம்

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார்.தற்போது பிரபலமான ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அதன்படி இன்று ஆரம்பமாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக வீட்டுக்குள் சென்றுள்ளார்

கமலையே வீட்டுக்குள் துணைக்கு கூப்பிட்ட GP முத்து....முதல் நாளே GP முத்தை வச்சு செய்த கமல் 2

விளம்பரம்

வீட்டுக்குள் தனியாக இருக்க அதிகமாக பயந்துள்ளார்.இதுகுறித்து அறிந்த கமல் அவருடன் விளையாடுவோம் என கூறி,இன்று நீங்கள் தான் தனியாக வீட்டில் இருக்க வேண்டும்,ஆட்கள் நாளை தான் வருவார்கள் என கூற உடனே பயந்துபோன முத்து சார் எப்படியாது ஆள அனுப்புங்க சார் பயமா இருக்கு என கெஞ்சியுள்ளார்.இது பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.உடனே கமல் நான் தான் உள்ளே வரணும் என கூற பரவாயில்லை நீங்க வாங்க சார் என கூறியுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் விழுந்து சிரித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment