The Indian Times

அமைதியா இருந்தா பொழைக்கமுடியாது…ஜனனியை டார்கெட் செய்யும் ADK | BIGG BOSS 6 PROMO

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா,ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து சுவாரசியம் இல்லாத 4 பேரை தேர்ந்தெடுத்து வெளியே படுக்க வைக்க கூறியுள்ளனர்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த ப்ரோமோவில் ஏடிகே அமைதியா இருந்த பொழைக்க முடியாது என கூறி ஜனனியை நாமினேட் செய்துள்ளார்.மேலும் பல போட்டியாளர்களும் ஜனனியை நாமினேட் செய்து வருகின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இன்றைய நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Embed video credits : Vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in