The Indian Times

BIGG BOSS வேட்டைக்கு ரெடியாகிய உலகநாயகன்..வெளியாகிய புதிய BIGG BOSS 6 PROMO

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.உலகநாயகன் படப்பிடிப்புகளில் பிசியாக இருப்பதால் விரைவில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதுவரை இல்லாத புதிய யுக்தியை பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இந்த முறை கடைபிடிக்க உள்ளது.இது வரை பிரபலங்கள் மட்டும் பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறது பிக் பாஸ்.மேலும் கடந்த சீசன்கள் எதிர்பார்த்த வரவேற்பினை பெறாததால் இம்முறை புதிய விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

அதன்படி பிக் பாஸ் சீசன் 6 புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.உலகநாயகன் ப்ரோமோவில் வந்து வேட்டைக்கு ரெடியா என கேட்டு அனைவரையும் குதூகலப்படுத்தியுள்ளார்.இதன்மூலம் இம்முறையும் உலகநாயகன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது.இந்த ப்ரோமோ பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in