The Indian Times

உயிரை துச்சமாக நினைத்து நடனமாடிய அமீர் மற்றும் பாவனியால் பதறிப்போன ரம்யாகிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சி மிகவும் பெயர்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி நம்பர் 1 .இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு தங்களது நடனத்திறமைகளை வெளிக்கொண்டு வந்து உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி முற்றிலுமாக நிறுத்தியுள்ள நிலையில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர். போட்டியாளர்கள் வெறித்தனமாக நடனம் ஆடி வெளுத்து வருகின்றனர்.


இந்த போட்டியின் இறுதி நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சுஜா மற்றும் சிவாஜி ,அமீர் மற்றும் பாவனி ஜோடிகள் டைட்டிலை வெற்றிபெற்றனர்.முதன் முதலாக இரண்டு டைட்டில்கள் நடன நிகழ்ச்சியில் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி நடனமாடிய வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது .உயிரை பணயம் வைத்து நடனமாடிய அமீர் மற்றும் பாவனியை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=HszcaPW57eA&feature=youtu.be

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in