The Indian Times

என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது…மஹாலக்ஷ்மி எமோஷனல் ஆன பதிவு

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர்.மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றனர்.

Advertisement

ரவீந்தரை மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.அவருக்கு ஜாமீன் பல நேரம் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.சிறையில் இருந்து வெளியே வந்த கணவருடன் புகைப்படம் எடுத்து அதில் நீ என்னை சிரிக்க வைக்க தவறியதே இல்லை,ஒருவர் மீதுள்ள அன்புக்குக் காரணம் நம்பிக்கைதான் ஆனால் இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது!!என பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in