The Indian Times

ஆட்டத்தை ஆரம்பித்த நிரூப்! கதி கலங்கி நிற்கும் சக போட்டியாளர்கள்! – Bigg Boss Promo 1

பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் வாரா வாரம் சூடு பிடிக்கும் இடம் தான் பிக் பாஸ் வீடு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! அப்படி ஆரம்பித்து 29 நாட்கள் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்பட தொடங்கியுள்ளது!இந்த வருடம் பிக் பாஸ் தொடங்கி ஐந்து வருடமான நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீடும் அதில் விதிமுறைகளும் சற்று வினோதமாக உள்ளது என்பதே உண்மை!

Advertisement

 

அப்படி இருக்கையில் பஞ்சபூதங்களையும் அதன் ஆற்றல்களையும் அடிப்படையாக கொண்டு 10 வாரங்களுக்கு இயங்கும் என அறிவித்த நிலையில் நாணயத்தை கைப்பற்ற சிலர் தங்களது நியாயத்தை மறந்து நடந்ததும் மற்றும் இன்னும் ஒரு சிலர் நம்பிக்கையாக பேசி ஏமாற்றியதும் நாம் அறிந்ததே! கடந்த வார இறுதியிலேயே நிரூப்புக்கும் அக்ஷராவுக்கும் வாக்குவாதம் பற்ற தொடங்கிய நிலையில் நேற்று நிலத்தின் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை நிரூப் தன்வசம் வைத்துள்ளதால் அவரது ஆளுமையால் இந்த வீடு இயங்கும் என்று அறிவித்த நிலையில் நிரூப் சில விதிகளை போட்டு தனக்கு உதவியாளராக அக்ஷராவை நியமிக்க அவரோ அதை மறுக்க மேலும் சூடு பிடிக்க தொடங்கியது!

Advertisement

அது மட்டுமில்லாமல் விதிமுறையை மீறுவதாக இமான் அண்ணாச்சியின் மீது பிரியங்கா உட்பட சக போட்டியாளர்கள் விளையாட்டு தனமாக போர்க்கொடி தூக்க, அது இறுதியில் சிறிது மனக்கசப்புடனே முடிந்தது! தலைவர் போட்டிக்கு தேர்வான சிபி மற்றும் ராஜு சேற்றில் கால்பந்து விளையாடி ஜெயித்தால் வீட்டின் தலைவராகலாம் என அறிவித்த நிலையில் ராஜூவை சிபி தோற்கடித்தாலும் நீர் ஆற்றலை குறிக்கும் நாணயத்தை வருண் வைத்துள்ளதால் அதன் சக்தியை பயன்படுத்தி இந்த பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக தன்னை தானே முடி சூட்டிக்கொண்டார்!

 

இந்த வார வெளியேற்று படலத்திற்கான நிகழ்வில் போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை மாறி மாறி கூறி காப்பாற்ற நினைத்தாலும் வழக்கம் போல இந்த வாரமும் 9 நபர்கள் மக்களை நம்பியுள்ளனர் என்பதே உண்மை! நாளுக்கு நாள் மாறி வரும் மக்கள் மனநிலையின் வெளிப்பாட்டை வெளிச்சம்போட்டு காட்டும் பிக் பாஸ் வீடு இன்னும் பல சவால்களை சந்திக்க உள்ள நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது! அந்த விடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch the Video Below….

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in