என்னது இது பவுலிங் ஆக்‌ஷனா..? மிரண்டுபோன பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ

வித்தியாசமான முறையில் பந்து வீசி எதிர் அணியை ஆட்டி படைக்கும் இளம் கிரிக்கெட் வீரர். சமீப காலமாக உலக அளவில் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் வீரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஒவ்வொரு நாடும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பதை அடிக்கடி நிரூபித்து கொண்டே இருக்கின்றனர். இதையடுத்து தற்போது ஒரு கிரிக்கெட் வீரர் தன் பந்து வீசும் ஸ்டைல் மூலம் அனைவரையும் கலங்க விடுகிறார். ஆம், இந்தியாவில் எப்படி ஐ பி எல் தொடரோ அதே போல அரேபியா நாடுகளில் டி10 என்ற பெயரில் ஒரு தொடர் நடைபெறும்.

என்னது இது பவுலிங் ஆக்‌ஷனா..? மிரண்டுபோன பேட்ஸ்மேன் - வைரல் வீடியோ 1

விளம்பரம்

இந்த தொடர் இப்போது தொடங்கிய நிலையில் 22 வயது இளம் வீர்ர் கெவின் கொத்திகோடா மராத்தா அரேபியன் என்ற அணியில் விளையாடி வருகிறார். இவர் பந்து வீசும் விதமும் வேகமும் அவர் பந்தை எதிர்க்கும் பேட்ஸ்மேனை அதிர வைத்துள்ளது. இந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கு முன்பு உலக அள‌வி‌ல் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த பால் ஆடம்ஸ் தான் வித்தியாசமான முறையில் பந்து வீசி வருகிறார் என்ற பெருமை இருந்தது. இவருக்கு அடுத்தபடியாக இந்த இளம் வீரர் இடம் பெற்றிருக்கிறார். இதையடுத்து Maratha Arabians மற்றும் Lahore Qalandarsa ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. Maratha Arabians அணியில் விளையாடி வரும் இவர் பந்து வீசி எதிர் அணியை ஆட்டி படைத்துள்ளார்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment