The Indian Times

ஃபுட் பால் கிரவுண்டில் மாஸ் காட்டிய Handsome MS தோனி

எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு மைல் கல்லாய் இருந்தவர். ஒரு சராசரி டிக்கெட் கலெக்டர் ஆக இருந்து இந்திய அணியின் கேப்டனாக மாறி இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் நிலை நாட்டிய ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இப்படி பலவேறு சாதனைகளை செய்து 2011 உலக கோப்பையை இந்திய அணிக்கு வாங்கி கொடுத்து அணியை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தார். இந்த அளவுக்கு புகழ் தேடி தந்த இவர் கடந்த ஆண்டு தன்னுடைய ஓய்வை அறிவித்தார். ஐ பி எல் போட்டியில் மட்டும் இவர் தொடர்ந்து விளையாடுவார் என்று உறுதி அளித்தார்.

இவருக்கு என்னதான் பல வெற்றி வாய்புகள் கிரிக்கெட்டில் அமைந்திருந்தாலும் சிறிய வயதில் இருந்தே இவருக்கு ஃபுட் பால் மீது தனி ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வத்தை இப்போது வரை தக்கவைத்து கொண்டு அதன் மீதும் தனி ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கிரிக்கெட் விளையாடும் போதே ஒரு சில ஃபுட் பால் போட்டியில் கலந்துக் கொண்டார்.

அந்த வகையில் இப்போது ஒரு ஃபுட் பால் கிரவுண்டில் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தனி சிறப்பு கொடுக்கப்பட்டது. இங்கு அவர் சில ஆலோசனைகளையும் விளையாடும் இளைஞர்களுக்கு கூறுகிறார். அது காண்போரை ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. என்ன தான் அவர் கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்ள வி‌ல்லை என்றாலும் அவரின் ரசிகர்கள் அவரை காணும் போதெல்லாம் உற்சாகம் அடைகின்றனர். இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

Video Embedded Via: Bollywood Tv Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in