இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் நடராஜன்

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற நிலையில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி வெற்றிபெறும் வாய்ப்பு இழந்ததை அடுத்து டெஸ்ட் சாம்பியன் ஷிப் தர வரிசை பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. இதனால் இந்திய அணி அடுத்து வரும் தொடரில் தங்கள் முழு முயற்சியுடன் விளையாட களம் இறங்க உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் நடராஜன் 1

விளம்பரம்

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியில் சற்று மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நட்ராஜன் விஜய் ஹசாரே ஒரு நாள் போட்டியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் நட்ராஜன் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். நட்ராஜன் எந்த போட்டியிலும் விளையாடம புதிய கிரிக்கெட் வீரராக இருக்க விரும்புவதாக தமிழக கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் நடராஜன் 2

விளம்பரம்

இதனால் நட்ராஜன் விஜய் ஹசாரே போட்டியில் இருந்து ஒய்வு பெறுவர் என்றும் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கு கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் தமிழக கிரிக்கெட் வாரியம் செயலாளர் ராமசாமி கூறியுள்ளார். இங்கிலாந்து உடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நட்ராஜன் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்ட்ரேலியா கிரிக்கெட் தொடரில் செய்த சாதனை தொடர்ந்து, இங்கிலாந்து உடனான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டால், இன்னும் பல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment