The Indian Times

பாகற்காயில் SWEET செய்யவா? அது எப்படி முடியும் கண்கலங்கிய சிவாங்கி… COOK WITH COMALI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது.ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கும் பெரும் ஆதரவினை அளித்து வருகின்றனர்,முதல் எலிமினேஷன் சுற்றில் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றார்.இரண்டாவது எலிமினேஷனில் இருந்து காளையன் வெளியேறியுள்ளார்.மூன்றாவதாக ராஜ் அய்யப்பா வெளியேறியுள்ளார்.

இந்தவார நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.,ப்ரோமோவில் இந்த வாரம் அட்வான்டேஜ் வென்ற மைம் கோபி சிவாங்கிக்கு போட்டியை கடுமையாக்க நினைத்து பாகற்காயை கொடுத்து இனிப்பு செய்ய சொல்லியுள்ளார்.இதனால் சிவாங்கி மிகவும் சோர்வாகி இதில் நான் எப்படி இனிப்பு செய்ய முடியும் என கண்கலங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in