Advertisement
in ,

விருது வழங்கும் விழாவில் மனமுடைந்து அழுத புகழ்!! நெஞ்சை கலங்க வைத்த தருணம்!!

குக்கு வித் கோமாளி” என்ற பெயரை சொன்னாலே அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாகவே காண படுகிறது. சமையல் தெரிந்த பிரபலங்கள் சமையல் தெரியாத பிரபலங்களுடன் முழுக்க முழுக்க நகைச்சுவையாக ஒளிபரப்பப்படும் இந்த சமையல் நிகழ்ச்சி வாரம் இரு முறை சனி ஞாயிறு விஜய் தொலைக்காட்சியில் வருகிறது. சீசன் 1 இல் வனிதா விஜயகுமார் டைட்டில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடந்து வரும் சீசன் 2 இல் குக்குகளாக அஸ்வின், கனி திரு, பாபா பாஸ்கர் மாஸ்டர், ஷகீலா, பவித்ரா, தர்ஷா, தீபா, மதுரை முத்து, ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.விருது வழங்கும் விழாவில் மனமுடைந்து அழுத புகழ்!! நெஞ்சை கலங்க வைத்த தருணம்!! 7

இதில் கோமாளிகளாக காதல் மன்னன் புகழ் , சிம்ம குரல் சிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பாலா, சரத்,சக்தி,சுனிதா ஆகியோர் உள்ளனர். எங்கு பார்த்தாலும் இந்த பேச்சு தான். மீம்ஸ்கள், பாராட்டு பதிவுகள் என்று சொல்லிகொண்டேய போலாம். இதில் முக்கிய பங்கு வகிப்பவர் தான் புகழ். இவரது துரு துரு என்ற இயல்பாலும், முக பாவனைக்கும், பெண்களிடம் காதல் மழை பொழிவது, நடுவர்களிடம் விளையாட்டு என புகழின் ரசிக்கும் படியான சேட்டைகள் ஏராளம். சீசன் 1 பொழுது புகழுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளய தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் இந்த நிகழ்ச்சிக்காக அந்த வாய்ப்பை இழந்தார்.

Advertisement
Advertisement

விருது வழங்கும் விழாவில் மனமுடைந்து அழுத புகழ்!! நெஞ்சை கலங்க வைத்த தருணம்!! 8

அனால் அதைவிட இன்று பல மடங்கு புகழை எட்டியுள்ளார் என்பதும் மறுக்க முடியாத உண்மையே! இந்நிலையில் நேற்று தனியார் யு ட்யூப் நிறுவனம் நடத்திய விருது விழாவில் இவருக்கு “பெஸ்ட் என்டேர்டைனர் ” என்ற விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது. மேலும் இந்த விருதை இவருக்கு இவரது கனவு கன்னிகளான பவித்ரா, தர்ஷா, ரித்விகா, சுனிதா ஆகியோர் இந்த விருதை வழங்கினர். விருதை பெற்று கொண்ட பின் புகழ் பேசிய தருணத்தில் தான் கடந்து வந்த கடினமான பாதைகளையும், விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என உருக்கமாக கூறினார்.

Advertisement

அப்பொழுது அவர் உணர்ச்சிபெறுகி கண்ணீர் விட்டார். இந்த நிகழ்வு விழாவிற்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. உழைத்தால் உயரலாம் என்பதற்கு புகழைவிட சிறந்த எடுத்துக்காட்டு தற்போது யாருமில்லை என்றே கூறலாம். சமீபத்தில் இவர் கார் ஒன்று வாங்கியுள்ளார். இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at [email protected]

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!! 27

தன்னிடம் பேட்டியெடுத்த தொகுப்பாளருடன் திருமணம்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பும்ரா!!

கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!! 28

கடமையை செய்யும் போலீஸ் அதிகாரியாக மாறும் கவர்ச்சி நடிகை!!! விவரம் உள்ளே!!