The Indian Times

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய் டிவி தொகுப்பாளர்

சிறு வயதில் இருந்தே விஜய் தொலைக்காட்சியின் செல்ல பிள்ளையாய் வலம் வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. அன்று முதல் இன்று வரை இவர் தான் நம்பர் ஒன். இவரது துறு துறு நடவடிக்கை, பேச்சு, நடனம், நிகழ்ச்சிகளை தொகுக்கும் விதம் என இவரது சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் ஷோ தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். விசில் , பவர் பாண்டி போன்ற படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். சிவ கார்த்திகேயன் , தீபக், மகப ஆனந்த், ரியோ, ரக்க்ஷன், பிரியங்கா என அனைவருடனும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இவர் சமீப காலங்களாக எந்த நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கவில்லை, இருப்பினும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் மார்ச் 08ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் வந்த குட்டி ஸ்டோரி பாடல் பாணியில் செய்தி ஒன்றை பெண்களுக்கு அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் ஐந்து முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

தனக்கு 36 வயதுக்கு மேல் ஆவதாகவும் அனாலும் தான் சிங்கள் என்றும் விவாகரத்தானவர் என்றும் குழந்தைகள் இல்லை என்றும் தனக்கு மூட்டு வலி உள்ளதாகவும் கூறிய அவர் ஆனாலும் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேறு மற்றும் கால நிலையும் வேறுபடும். நடப்பதை நினைத்து கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியாய் இருப்பதே அழகு. நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள். அணைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு அன்பு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர். பிறப்பாலும் பொறுப்பாலும் சிறப்பாலும் மேன்மை அடைந்து நம் வாழ்க்கையில் தாயாய், தங்கையாய், தமக்கையாய், துணைவியாய், மகளாய், தோழியாய் மற்றும் இன்னும் பல உறவுகளால் நீங்கா இடம் பிடித்த பெண்களை நாமும் வாழ்தலாமே!! Watch the video below!!

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in