The Indian Times

இது நம்ம CWC அஸ்வின்னா அடையாளமே தெரியாம கெத்தா மாறிட்டாரே

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.பட வாய்ப்பு தேடி வந்த அவருக்கு இறுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் முகம் ஒரு நிமிடம் தெரிந்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரியும்போது அது அஸ்வினுக்கு மட்டும் தெரியாதா என்ன.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையும் காட்டினார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது.

Advertisement

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார் அஸ்வின்

Advertisement

தற்போது தாடி முறுக்குமீசையுடன் கெத்தாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படம் ரசிகர்களிடம் பெருமளவு வைரலாகி வருகிறது.அஸ்வினுக்கு பொதுவாகவே பெண்கள் ரசிகைகள் அதிகம் என்பதால் புகைப்படத்தில் பெண் ரசிகர்கள் அஸ்வினை பாராட்டி புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in