The Indian Times

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி சண்டை காட்சிகளை இப்படித்தான் எடுத்தாங்களா…அடேங்கப்பா

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அப்பா,அண்ணனை போல் தானும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என துணை இயக்குனராக மணிரத்தினத்திடம் பணியாற்றினார்.பின்னர் நடிகராக களம் இறங்கிவிட்டார்.அமெரிக்கா சென்று படித்த நடிகர் கார்த்தி தனது முதல் படமான பருத்திவீரன் படத்தில் மதுரை ஆளாக நடித்து அந்த மொழிகளிலேயே பேசி அனைவரையும் ஆச்சரியப்பட செய்தார்.முதல் படமே பெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகராக கார்த்தியை உருவாக்கியது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பையா படத்தில் நடித்தார்.அப்படமும் பெரும் ஹிட் கொடுத்தது இவருக்கு.இவ்வாறு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பட்டியலில் கார்த்தியும் குறுகிய காலத்திலேயே இணைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 30 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது.இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.படம் வெளியாகி 7 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடியை வசூலித்துள்ளது.

Advertisement

இப்படத்தில் கார்த்தி வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் கப்பல் சண்டை காட்சிக்கு கார்த்தி பயங்கரமாக பயிற்சி செய்துள்ளார்.இந்த பயிற்சி வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ஆர்வமாக இந்த வீடியோவை கண்டு வருகின்றனர்.

Embed video credits : Trend Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in