The Indian Times

பாகுபலி கஷ்டப்பட்டு செய்த வசூலை ஒரே வாரத்தில் அசால்ட்டாக செய்த பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.இவரின் நீண்ட நாள் கனவு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க வேண்டும் என்பதே,அதற்கான சரியான நேரம் காத்திருந்து கதையின் உரிமையை வாங்கினார்.பின்னர் படத்தினை எடுக்க துவங்கி விட்டார்.இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி,கார்த்தி,விக்ரம்,பிரபு,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்புகளுக்குள் மத்தியில் உருவாகிய இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஆர்வமாக படத்தினை கண்டு வருகின்றனர்.படம் வெளியாகிய 7 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை வசூல் செய்து உள்ளது.

Advertisement

தமிழகத்தில் மட்டும் இப்படம் 150கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும் இனி வரும் வாரங்களில் 180 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம் தமிழகத்தில் பாகுபலி செய்த வசூலான 153 கோடியை ஒரே வாரத்தில் அசால்ட்டாக முந்தியுள்ளது.மேலும் விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் வசூலை முந்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in