தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்துட்டாங்களா?…தனுஷ் அப்பாவே பதில் சொல்லிட்டாரு

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்.

தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்துட்டாங்களா?...தனுஷ் அப்பாவே பதில் சொல்லிட்டாரு 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில்நடித்திருந்தார்.இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தினை தொடர்ந்து தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார்,இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.மேலும் அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்

தனுஷ் ஐஸ்வர்யா சேர்ந்துட்டாங்களா?...தனுஷ் அப்பாவே பதில் சொல்லிட்டாரு 2

விளம்பரம்

 

சில மாதங்களுக்கு முன்னர் இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துகொண்டு தனித்து வாழ இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.இது ரசிகர்களுக்கும் சினிமா உலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது,இந்நிலையில் அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் இருவரையும் அழைத்து பேசியதாகவும் இதனால் இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அண்மையில் இயக்குனரும் தனுஷின் அப்பாவும் ஆனா கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட பொழுது கூறியதாவது,எனக்கு தெரியாது ஆனால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்,அவர்கள் சந்தோசம்தான் எங்கள் சந்தோசம் என கூறியுள்ளார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment