மோகன்லால் இயக்கும் மலையாள படத்தில் தல அஜித் ! விவரம் உள்ளே

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் மோகன்லால். இவருக்கு மலையாளத்தில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரிஷ்யம் 2 திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியானாலும் மிக பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது மோகன்லால் பரோஸ் என்ற பாண்டஸி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாது இந்த படத்தை இயக்க போவதும் மோகன்லால் தான் என்ற தகவலும் வெளியானது. இந்த படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் என்ற தமிழ் நாட்டை சேர்ந்து சிறுவன் இசையமைக்க உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கட்டாயம் படிக்கவும்
விஜய் ஆண்டனி , கெளதம் வாசுதேவ் மேனன் , பிரேம்ஜி இனைந்து பாடிய Slum Anthem | கோடியில் ஒருவன்

மோகன்லால் இயக்கும் மலையாள படத்தில் தல அஜித் ! விவரம் உள்ளே 1

விளம்பரம்

ஏராளமான வெளிநாட்டு நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தை 3டி யில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முக்கிய அம்சமாக விளங்குவது என்னவென்றால் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமான தல அஜித் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித்.

கட்டாயம் படிக்கவும்
சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார்?? - அச்சத்தில் ரசிகர்கள்!

மோகன்லால் இயக்கும் மலையாள படத்தில் தல அஜித் ! விவரம் உள்ளே 2

விளம்பரம்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் கார் ரேஸ் , பைக் ரேஸ் ஓட்டுவதிலும் தல கிங்கு தான். இந்நிலையில் தற்போது மோகன்லால் தன்னுடைய பரோஸ் என்ற படத்தில் நடிக்கும் படி கேட்டதற்கு தல அஜித் ஓகே சொல்லி உள்ளார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் மலையாளத்தில் மாஸ் காட்ட போகிறார் தல அஜித் என்று இந்த செய்தியை வைரலாகி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம.

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment